உள்ளூர் செய்திகள்
முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நிகழ்ச்சி நடை பெற்ற போது எடுத்த படம்.

முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-04-19 14:29 IST   |   Update On 2022-04-19 14:29:00 IST
பொன்னமராவதி ஆர்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்ட திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் ஏப்ரல் 2ம்தேதி காப்புக்கட்டப்பட்டு தினம்தோறும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் வடம் பிடிக்க புறப்பட்ட தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து தேரடியில் நிறைவுற்றது. விழாவையொட்டி  பக்தர்கள் அலகு குத்தி அம்மனை வழிபட்டனர்.  

ஆர்.பாலகுறிச்சி, வைரவன்பட்டி, சீகம்பட்டி, ரெகுநாதபட்டி, கோபால்பட்டி, விடத்தலாம்பட்டி மற்றும் சுற்றுக்கிராம மக்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர். 

பாதுகாப்பு ஏற்பாடுகளை  காவல்துறையினர் செய்திருந்தனர்.

Similar News