உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தொழிலாளி  மீது தாக்குதல்

Published On 2022-04-19 10:44 IST   |   Update On 2022-04-19 10:44:00 IST
அரியாங்குப்பம் அருகே நம்பிக்கை துரோகம் செய்ததாக தொழிலாளி சரமாரியாக தாக்கப்பட்டார்.
புதுச்சேரி:

அரியாங்குப்பம் அருகே மணவெளி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 44). கட்டிட தொழி-லாளி.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சுந்தரமூர்த்திக்கு பழக்கமான தவமணி என்பவரின் 5 வயது ஆண் குழந்தை கிணற்றில் விழுந்து இறந்து போனது. 

இது சம்பந்தமாக அரியாங்-குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு-கின்றனர்.
 
இதற்கிடையே தவமணி தனது குழந்தை இறப்புக்கு அங்கு விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் தான் காரணம் என்று கவர்னர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார்.  அதற்கு சுந்தரமூர்த்தி உதவி செய்தார். 

இந்த நிலையில் தவமணி அனுப்பிய புகார் மனுவில் சுந்தரமூர்த்தியின் உறவினர் மகனான தென்னரசு (19) என்பவரது  பெயரையும் சேர்த்து இருந்ததால் அந்த புகார் மனுவின் நகலை தவமணிக்கு தெரியாமல் சுந்தரமூர்த்தி சிவபாலனுக்கு கொடுத்ததாக கூறப்-படுகிறது. 

இதனை அறிந்த தவமணி சுந்தரமூர்த்தி மீது ஆத்தி-ரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுந்தர-மூர்த்தி தனது வீட்டில் இருந்தார். 

அப்போது தவமணி தனது கூட்டாளிகளான பார்த்திபன் மற்றும் பாலு ஆகியோரை அனுப்பி சுந்தர-மூர்த்தியை கடைக்கு செல்லலாம் என கூறி அழைத்து வருமாறு கூறிய-தாக தெரிகிறது.

அதன்படி பார்த்திபனும், பாலுவும் சேர்ந்து சுந்தர-மூர்த்தியை மோட்டார் சைக்கிளில் தவமணி வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு தயாராக இருந்த தவமணி தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு பைப்பால் சுந்தர-மூர்த்தி தலையில் தாக்கினார். மேலும் பார்த்திபன் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த மர சட்டத்தால் தாக்கினார். 

இதில், தலையில் பலத்த காயம் அடைந்த சுந்தரமூர்த்தி ரத்தம் கொட்டி மயங்கி போனார். 

இதுபற்றி அறிந்த சுந்தரமூர்த்தியின் அண்ணன் கோவிந்தன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுந்தரமூர்த்தியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். 

பின்னர் இதுகுறித்து சுந்தரமூர்த்தி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News