உள்ளூர் செய்திகள்
சாலை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

ரூ.16 லட்சம் செலவில் வாய்க்கால் அமைக்கும் பணி

Published On 2022-04-19 10:40 IST   |   Update On 2022-04-19 10:40:00 IST
மதகடிப்பட்டு பாளையம் பகுதியில் ரூ.16 லட்சம் செலவில் வாய்க்கால் அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

புதுவை அரசின் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலை பிரிவு தெற்கு கோட்டத்தின் சார்பில் திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட மதகடிப்பட்டு பாளையம் சாலையில் ரூ.16 லட்சத்து 24 ஆயிரம் செலவில் வாய்க்கால் அமைக்கப்படுகிறது.

சுமார் 300 மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட உள்ள இந்த வாய்க்கால் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணவாளன், உதவிப்பொறியாளர் தனசேகரன், இளநிலை பொறியாளர் கிருஷ்ணன், ஒப்பந்ததாரர் சரவணன் மற்றும் ஊர் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

Similar News