உள்ளூர் செய்திகள்
கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

தூய மங்கள அன்னை ஆலய விழா கொடியேற்றம்

Published On 2022-04-18 15:08 IST   |   Update On 2022-04-18 15:08:00 IST
தூய மங்கள அன்னை ஆலயம் 87-ம் ஆண்டு திருவிழாவினை முன்னிட்ட மூன்று மத தலைவர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.
அரியலூர் :

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள தூய மங்கள அன்னை ஆலயம் 87ம் ஆண்டு திருவிழாவினை முன்னிட்ட மூன்று மத தலைவர்கள் முன்னிலையில் கொடியேற்றம்  நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருமழபாடி பல்லிவாசல் மஜித் சாதிக். சி.எஸ்.ஐ சர்ச் கண்ணியர் கீதா முன்னிலையில் காரியகாரவயரா பிரான்சிஸ் தலைமையேற்று கோடியேற்றினார். புதுக்கோட்டை மரியாயின் சேனையினர் தலைமையில் அய்யம்பேட்டை பங்குதந்தை அந்துவான் தலைமையில் திருப்பலியும்.


இன்று கரும்பு வெட்டும் குழுவினர் தலைமையில் குடந்தை அருண் சபரிராஜ் தலைமையில் திருப்பலியும்.  நாளை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை வின்சன்ட் தே பவுல் சபை சார்பாக பங்குதந்தை குழந்தை விட்டார் லாரன்ஸ் தலைமையில் திருப்பலியும். 20ந் தேதி மகளிர் சுய உதவிக் குழுவினர் தலைமையில் பங்குதந்தை ஜான் போஸ்கோ  தலைமையில் திருப்பலியும்.

24ந் தேதி அனைத்து உள்ளூர் வெளியூர் பக்தர்கள் தலைமையில் புள்ளம்பாடிபங்குதந்தை சூசை மாணிக்கம் அல்போன்ஸ் திருப்பலியும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 25ந் தேதி திருவிழாவின் நிறைவாக  புதுக்கோட்டை பங்குதந்தை ரெஜிஸ் தலைமையில் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற உள்ளது.


Similar News