உள்ளூர் செய்திகள்
மர்ம விலங்கு கடித்து இறந்த ஆடுகள்.

மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி

Published On 2022-04-17 14:46 IST   |   Update On 2022-04-17 14:46:00 IST
சென்னிமலை அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:

சென்னிமலை அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் அடுத்த பாலப் பாளையம், திட்டுகாடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (78).

இவர் தனது தோடத்து ஆட்டுபட்டியில் செம்மறி ஆடுகள் உள்பட 45 ஆடுகள் வளர்த்து வருகிறார். 

இதற்காக பட்டியை சுற்றி முள்வேலி அமைத்து உள் ளார். இரவு வழக்கம் போல் பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் அதிகாலை பட்டிக்கு சென்று பார்த்த போது மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

மேலும் 5 ஆடுகளை கடித்து குதறியதில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது. காயம் அடைந்த ஆடுகளுக்கு ஈங்கூர், அரசு கால்நடை மருத்துவ மனை மருத்துவர் அருண் சிகிச்சை அளித்தார்.

இது குறித்து வனத்துறை, கால்நடை துறை, வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த ஆடுகளை பார்வையிட்டனர். 

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ஆடுகள் நாய்கள் கடித்து இறந்ததா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றனர்.

Similar News