உள்ளூர் செய்திகள்
தீ விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரத்தை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் நவீந்திரன் பொதுமக்களுக்கு வழங்கினார்.

தீ விழிப்புணர்வு துண்டுபிரசுரம்

Published On 2022-04-17 13:23 IST   |   Update On 2022-04-17 13:23:00 IST
தீ விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு அடங்கி துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் பெருந்துறையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு வழங்கினர்
பெருந்துறை:

தீ விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு அடங்கி துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் பெருந்துறையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு வழங்கினர்

தமிழகம் முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பாக தீ தொண்டு நாள் வார விழா ஏப்ரல் 14-ந் தேதி  முதல் 20-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

1944 வருடம் ஏப்ரல் 14 அன்று விக்டோரியா துறைமுகத்தில் நின்ற போர்ட் சிட்னி என்ற வெடிமருந்து கப்பலில் இருந்த வெடிமருந்துகள் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டபோது,

தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களில் 66 தீயணைப்பு வீரர்களும் மற்றும் ஏராளமான பொதுமக்களும் தங்களுடைய உயிர்களை இழந்தனர்.

இந்த சோக நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14-ந் தேதி இந்தியா முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தீ தொண்டு நாளாக அனுசரித்து வருகின்றனர்.

இது போன்ற தீ விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இதையொட்டி பெருந்துறை தீயணைப்பு நிலையத்தின் சார்பாக நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பெருந்துறையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது எப்படி, தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வுகளை பொது மக்களுக்கு அதிகாரிகள் எடுத்து கூறினர்.

Similar News