உள்ளூர் செய்திகள்
திருவிளக்கு பூஜை நடந்த போது எடுத்த படம்.

பவானி கருமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Update: 2022-04-17 07:12 GMT
பவானி தேவபுரம் கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பவானி:

பவானி தேவபுரம் கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பவானி தேவபுரம் கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

விழாவையொட்டி ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவம் தலைமையில் திரு விளக்கு பூஜை நடைபெற்றது.  இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் 100&க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.

திருவிளக்கு பூஜைக்கு தேவையான எண்ணை, மஞ்சள், குங்குமம், திரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கோவில் சார்பில் வழங்கப்பட்டது. 

பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் குத்து விளக்கு, தட்டு, டம்ளர் போன்றவற்றை கொண்டு வந்து பூஜையில் கலந்து கொண்டனர்.

இது குறித்து அந்த பகுதி பக்தர்கள் கூறும் போது, நோய் நொடியின்றி ஆரோக் கியத்துடன் வாழலாம், திருமண தடை நீங்கும்.

குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்புகள் மற்றும் இயற்கை வளங்கள் செழித்து விளங்கவும் இந்த திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது என்றனர்.
Tags:    

Similar News