உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாட நடவடிக்கை: ரங்கசாமி உறுதி

Published On 2022-04-17 05:59 GMT   |   Update On 2022-04-17 05:59 GMT
புதுவையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் தமிழிசை சித்திரை முழு நிலவு விருந்தளித்தார்.

இதில் புட்டு, ஆப்பம், குழிப்பணியாரம், முடக்கத்தான் தோசை, இளநீர் பாயாசம் உள்பட பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. 

தொடர்ந்து மல்லர் கம்பம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, நாதஸ்வர கச்சேரி நடந்தது. 

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
 
விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

புதுவையின் கடற்கரை திருவிழா மூலம் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதுவை வியாபார தலமாக மாறியுள்ளது. பல வீடுகள் கடைகளாக மாறியுள்ளன. புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அனைத்து அம்சங்களும் உள்ளன. 

புதுவையை மெருகூட்டும் வகையில் பாரம்பரிய விழாக்கள் உள்பட பல விழாக்களை எடுத்து வருகிறோம். மாநில உள்கட்டமைப்புகளையும் மேம்-படுத்தி வருகிறோம். 

புதுவை கலை அம்சத்துடன் கட்டப்பட்ட கட்டிடங்கள் நிறைந்த மாநிலம். அந்த கட்டிடங்களை பழமை மாறாமல் பராமரித்து வருகிறோம். கவர்னர் மாளிகை பாரம்பரியம் மிக்கது. 

இந்த கட்டிடம் பழமை மாறாமல் புனரமைக்கப்படும். கவர்னர் மாளிகையில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இது நல்ல விஷயம். சித்திரை திருவிழாவை தொடர்ச்சியாக கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்கும். 

இவ்வாறு அவர் பேசி-னார்.
Tags:    

Similar News