உள்ளூர் செய்திகள்
கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

செந்துறை சமத்துவபுரத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

Published On 2022-04-14 14:48 IST   |   Update On 2022-04-14 14:48:00 IST
செந்துறை சமத்துவபுரத்தில் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர் :

அரியலூர் மாவட்டம், செந்துறை சமத்துவபுரத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்த அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
 
செந்துறை கிராம ஊராட்சி சமத்துவபுரத்தில் 100 வீடுகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த சமத்துவபுரத்தை சீரமைக்கவும், அவற்றின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதியதாக மயானம் அமைத்துத்தர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சமத்துவபுரத்தின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், செயற் பொறியாளர் ராஜராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News