உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
அம்பேத்கர் பிறந்த நாளைமுன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் திருமானூரில் அமைந்துள்ள ஜி.கே.எம். நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டாக்டர் அம்பேத்கர் 131&வது பிறந்த நாளைமுன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விடுதலை சிறுத்தை கட்சிகள் மற்றும் பல அரசியல்கட்சி சார்பில் நோட்டு, பேனா, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் எசனை கண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜெய்கனெஷ் வரவேற்றார். மாநில துணை செயலாளர்கள் அன்பானந்தம் மற்றும் கருப்புசாமி சிறப்பு அழைப்பாளர்களகா கலந்துகொண்டு மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினர்.
இதில் தொகுதி செயலாளர் மருதவாணன், ஊடக பிரிவு சதீஷ், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் ஜெயபால், லட்சிய தி.மு.க. மாவட்ட செயலாளர் வினோத் ராஜ், மாவட்ட சிம்பு ரசிகர் மன்ற தலைவர் அஜித்குமார், சிபிஎம் தர்மராஜ் மற்றும் சிவன்ராஜ், ராஜீவ்காந்தி, அசோக், ராஜா சரண்ராஜ் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நிறைவில் பள்ளி தலைமையாசிரியர் லதா நன்றி கூறினார். ஆசிரியர்கள் சுஜாதா, ரேவதி, சுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.