உள்ளூர் செய்திகள்
லாங்கு பஜாரில் நெரிசலை குறைக்க பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் வாகன நிறுத்தும் இடம்
லாங்கு பஜாரில் நெரிசலை குறைக்க பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் வாகன நிறுத்தும் இடமாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
வேலூர்:
வேலூர் லாங்கு பஜாரில் நேதாஜி மார்க்கெட்டை ஒட்டியுள்ள பகுதியில் பலர் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். பஜார் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மார்க்கெட்டுக்கு வருபவர்கள் வண்டியை நிறுத்த இடமில்லாமல் திணறி வருகின்றனர். இந்த நிலையில் நேதாஜி மார்க்கெட் அருகே உள்ள பழைய மீன் மார்க்கெட் வளாகத்தை இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இன்று மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் ஏலம் கோரப்பட்டுள்ளது