உள்ளூர் செய்திகள்
சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
சொத்துவரி உயர்வை கண்டித்து நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நகர்மன்ற முதல் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில், நகராட்சி கமிஷனர் சித்ரா சோனியா முன்னிலையில், மேலாளர் பொறுப்பு செந்தில் தீர்மானத்தை வாசித்தார்.
இதில் நகராட்சி உறுப்பினர்கள் ஜேசுமேரி, செல்வராணி, சத்தியன், கண்ணன், ரேவதி, கலியமூர்த்தி, ராஜேந்திரன், மகாலட்சுமி, இன்பவல்லி, முகமது இஸ்மாயில், மலர்கொடி, வெங்கடாஜலபதி, ஜெயந்தி, ராணி ராஜேஷ், ஜீவா, புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகராட்சி கூட்டத்தில் 20 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க. உறுப்பினர்கள் ராஜேந்திரன், வெங்கடாஜலபதி, ஜீவா, முகமது இஸ்மாயில், இன்பவள்ளி, மகாலட்சுமி, ம.தி.மு.க. மலர்கொடி ஆகியோர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்து வெளி நடப்பு செய்தனர். பின்னர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.