உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வழக்குகள் சமரச மையத்தின் மூலம் தீர்வு

Published On 2022-04-13 14:55 IST   |   Update On 2022-04-13 14:55:00 IST
கடந்த 5 ஆண்டுகளில் 350 வழக்குகள் சமரச மையத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன என மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்தார்.
அரியலூர் :

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நீதிமன்றங்களிலிருந்து அனுப்பப்பட்ட 350 வழக்குகள் மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன என மாவட்ட முதன்மை நீதிபதி மகாலெட்சுமி தெரிவித்தார்.


தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்தின் 17& வது ஆண்டு விழா குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி அரியலூர் ஆட்சியார் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். மகாலெட்சுமி தலைமை வகித்துப் பேசுகையில், இதன் சிறப்பு அம்சமாக நீதிமன்றங்களில் வழக்கு தொடராமலேயே மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் மனு கொடுத்து (குற்றவியல் வழக்கு தவிர) சமரச மையத்தை நாடலாம்.

மேலும், கடந்த 9.04.2005-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவால், சமரச மையம் தொடங்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டத்தில் கடந்த 9.4.2018-இல் சமரச மையம் தொடங்கப்பட்டு இதுநாள் வரை அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களிலிருந்து 350 வழக்குகள் சமரச மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

முக்கியமாகப் பிரிந்த 2 குடும்பங்கள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சேர்த்து வைக்கப்பட்டு, இன்று 2 குடும்பங்களும் குழந்தைகளுடன் வந்து இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர் என்றார்.
துணை காவல் கண்காணிப்பாளர் திருமேனி, மாவட்ட குடும்பநல நீதிபதி செல்வம் உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், அரியலூர்அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள், காவல் துறை, வருவாய்த் துறை, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Similar News