உள்ளூர் செய்திகள்
ஆபாச வீடியோவை பகிர்ந்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பொன்பரப்பி அருகே உள்ள சேடக்குடிக்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம்.
இவரது மகன் அஜித்குமார் வயது 23. இவர் இணைய தளத்தில் வந்த குழந்தைகளின் பாலியல் ரீதியாக எடுக்கப்பட்ட வீடியோவை முகநூல் பக்கத்தில் பலரும் பார்க்கும் வகையில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் முகநூல் நிறுவனம் மூலம் சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து சுமதி அஜீத்குமாரிடம் விசாரணை செய்தனர்.
இதனையடுத்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.