உள்ளூர் செய்திகள்
பொதுமக்களின் கோரிக்கை மனுவிற்கு உடனடி நடவடிக்கை
பொதுமக்களின் கோரிக்கை மனுவிற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 328 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்-கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், செந்துறை வட்டம், கழுமங்களம் கிராமத்தில் தீவிபத்தினால் உயிரிழந்த ராணி என்பவரின் வாரிசுதாரர்களிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000-க்கான காசோலையினையும், அரியலூர் மாவட்டத்தில் 2021-2022&ம் நிதி ஆண்டில் மது அருந்துவது மற்றும்
அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது-மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, இணையவழி வாயிலாக ஓவியப்-போட்டி, கவிதைப்போட்டி, விழிப்புணர்வு வாசக போட்டி மற்றம் குறும்படங்கள் தயாரித்தல் ஆகிபோட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 13 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் உரிய அறிவுறுத்தலின்படி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தி பல்வேறு போட்டிகள் வெற்றிப் பெற்ற 65 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.