உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

Published On 2022-04-12 06:23 GMT   |   Update On 2022-04-12 06:23 GMT
அரசு பள்ளியில் புகுந்து மாணவனை தாக்கி ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன். ஆட்டோ டிரைவர். இவர் தற்போது குடும்பத்துடன் முதலியார் பேட்டை மார்கெட் வீதியில் வாடகை வீட்டில்  குடும்பத்-துடன் வசித்து வருகிறார். இவரது மூத்தமகன் புதுவை சுப்பையாநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 

அன்பழகன் முன்பு தமிழகப்பகுதியான் ஸ்ரீராம் நகரில் வசித்த போது அவரது மகனுக்கும் ரோடியர் பேட் அங்கு நாயக்கர் தோப்பு பகுதியை சேர்ந்த அப்துல் காதர் (20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அன்பழகனின் மகனை அப்துல் காதர் வெளியே அழைத்து சென்று தவறான செயலில் ஈடுபடுத்தி வந்தார்.

இதனை அறிந்த அன்பழகன் ஸ்ரீராம் நகரில் இருந்து வீட்டை மாற்றி முதலியார் பேட்டையில் குடியேறினார். மேலும் தனது மகனை தினமும் ஆட்டோவிலேயே பள்ளிக்கு அழைத்து சென்று பின்னர் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வருவார். 

ஆனாலும் ஒரு சில நாட்களில் அன்பழகன் சென்ற பின்னர் பள்ளியில் இருந்து அவரது மகனை அப்துல் காதர் அழைத்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். 

இதனை அன்பழகன் கண்டித்ததால் அவரது மகன் அப்துல் காதருடன் பழகுவதை நிறுத்திக்-கொண்டார். 

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி அப்துல் காதர் பள்ளிக்கூட அலுவலக அறைக்குள் அத்துமீறி நுழைந்து அன்பழகனின் மகனை அழைத்துள்ளார். ஆனால் அந்த மாணவன் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் காதர் அந்த மாணவனை தாக்கி தன்னுடன் வராவிட்டால் உனது தந்தையை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இதனை தட்டிக்கேட்ட பள்ளி ஆசிரியர்களிடம் என் மீது ஏற்கனவே 2 வழக்கு உள்ளது. உங்களைகொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு அப்துல் காதர் சென்றுவிட்டார்.

இது பற்றி ஆசிரியர்கள் மாணவனின் தந்தையான அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அன்பழகன் பள்ளிக்கு விரைந்து வந்து அவரது மகனை அழைத்துச் சென்று குயவர்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார். பின்னர் இது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் காதரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்
Tags:    

Similar News