உள்ளூர் செய்திகள்
குடிமகன்கள் பிடியில் சிக்கியுள்ள போடி பஸ் நிலையம்.

போடி பஸ்நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம்

Published On 2022-04-11 11:39 IST   |   Update On 2022-04-11 11:39:00 IST
போடி பஸ்நிலையத்தில் குடிமகன்கள் தொல்லையால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையும் ஏலக்காய், டீத்தூள் ஆகி-யவை போடி பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும் பல்வேறு வியாபார நிமித்தமாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து போடிக்கு ஏராளமான பயணிகள் வருகின்றனர்.

பஸ்நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரத்தின் அருகிலேயே கழிப்பிடம் மற்றும் குப்பை கொட்டும் இடம் இருப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மேலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

இங்கு காலை நேரத்திலேயே மதுபோதையில் சுற்றி வரும் குடிமகன்கள் நிழற்குடையில் படுத்து தூங்கி விடுகின்றனர். போதையில் உடைகள் கலைவது கூட தெரியாமல் தூங்குவதால் பெண்கள், மாணவ, மாணவியர்கள் அங்கு செல்ல அச்சமடைகின்றனர்.

இதனால் வெயில், மழையில் நனைந்தவாறு பஸ்சிற்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையும் பூட்டப்பட்டுள்ளது. பஸ்நிலையத்தை குடிமகன்கள் மற்றும் சமூக விரோதிகள் ஆக்கிரமித்துள்ளதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News