உள்ளூர் செய்திகள்
தங்க கவசம் அணிந்து வைர கிரீடத்தில் அருள் பாலித்த மகாமாரியம்மன்.

கவுந்தப்பாடி மகாமாரியம்மன் கோவில் பொங்கல் விழா

Published On 2022-04-09 06:27 GMT   |   Update On 2022-04-09 06:27 GMT
கவுந்தப்பாடி அருகே மகாமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி அம்மன் தங்க கவசம் அணிந்து வைர கிரீடத்தில் பக்தர்களுக்கு பாலித்தார்.
கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி அருகே மகாமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி அம்மன் தங்க கவசம் அணிந்து வைர கிரீடத்தில் பக்தர்களுக்கு பாலித்தார்.

கவுந்தப்பாடி அடுத்துள்ள செந்தாம்பாளையம் மகாமாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடி யேற்றம் மற்றும் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து 30-ந் தேதி  கம்பம் நடப்பட்டது. கடந்த 1&ந் தேதி கம்பத்தில் பூவோடு வைத்து கம்ப ஆட்டம் நடைபெற்றது. சுற்று வட்டார கிராம மக்கள்  அலகு குத்துதல், தீர்த்தகுடம், அக்னி சட்டி எடுத்து வர மஞ்சள் காப்பு அணிந்து விரதம் இருந்தனர்.

இதனையடுத்து நேற்று காலை 4 மணிக்கு சாத்துபடி பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். நேர்த்தி கடனாக உருவபொம்மைகள் வைத்து பூஜைகள் செய்தனர். 

 பின்னர் பொங்கல் வைத்து கிடாவெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்து. விவசாயிகள் ஆடு, மாடு, எருமைகளை வேப்பிலை கட்டி கோவிலை வலம் வந்து திருநீர் வாங்கி கால் நடைகளுக்கு பூசி சென்றனர். விவசாய பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நோய் வராமல் காக்க வேண்டி கொண்டனர்.

மாலை பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாரியம்மனை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு மகா மாரியம்மன் தங்க கவசம் அணிந்து வைர கிரீடத்தில் பக்தர்களுக்கு பாலித்தார்.
Tags:    

Similar News