உள்ளூர் செய்திகள்
கல்வி தொலைக்காட்சியில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய&மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவ&மாணவிகளின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழக அரசு சீரியமுறையில் செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சரால் 20.3.2022 அன்று முதல் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங் கப்பட்டுள்ளது. அத்துடன் ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சி களை தினமும் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் இதன் மறு ஒளிபரப்பு மாலை 7 மணியில் இருந்து 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இதனை போட்டித்தேர்விற்கு படிக்கும் அனைத்து மாணவ&மாணவிகளும் பயன்படுத்தி பயனடையலாம்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.