உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் சேதப்படுத்திய 2 பேர் மீது வழக்கு
மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் கருப்பையா (47). இவரது கடையில் திருச்சுழி சேதுராயனேந்தலை சேர்ந்த வல்லரசு, லட்சுமணன் ஆகியோர் மது வாங்க வந்தனர்.
அப்போது இருவரும் கருப்பையாவிடம் தகராறு செய்து கடை முன்பு நிறுத்தி இருந்த அவரது மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இதுகுறித்து கருப்பையா கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.