உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி திருவள்ளுவர் நகர் பகுதியில் ரெயில்வே கேட் மூடப்பட்டு உள்ளதால் பள்ளி மாணவ- மாணவிகள் தவிப்பு
பண்ருட்டி சென்னை சாலை ரெயில்வே மேம்பாலம் திருவள்ளுவர் நகர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது.
பண்ருட்டி:
பண்ருட்டி சென்னை சாலை ரெயில்வே மேம்பாலம் திருவள்ளுவர் நகர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு கடந்த ஒரு மாத காலமாக ரெயில்கேட் பராமரிப்பு பணிக்கான வேலை நடந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், பொது மக்களும், வியபாரிகள் பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் தணிகைச் செல்வம், மாநில வர்த்தகர் அணி பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ரெயில்வே அதிகாரிகளிடம் பேசி உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு இந்த ரெயில்வே கேட்டை திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.