உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ரூ.2 லட்சம் மதிப்பு சாராயம், கார் பறிமுதல் - ஒருவர் கைது

Published On 2022-04-03 13:20 IST   |   Update On 2022-04-03 13:20:00 IST
சீர்காழியில் ரூ.2 லட்சம் மதிப்பு சாராயம், காரை பறிமுதல் செய்து புகையிலை பொருட்கள் விற்றவரையும் போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் சீர்காழி போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது காரைக்காலிருந்து சீர்காழி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் 40 மூட்டைகளில் 2,000 புதுச்சேரி மாநில சாராயம் நிரப்பப்பட்ட பாட்டில்கள் இருந்தது.

ரூ.2 லட்சம் மொத்த மதிப்பிலான கார் மற்றும் சாராய பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கார் ஓட்டிவந்த மயிலாடுதுறை தூக்கனாம் குளம் பகுதியை சேர்ந்த செந்தில்குமாரை (25) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இதில் தொடர்புடைய மற்றொருவரையும் தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில் சீர்காழி அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பெட்டிக் கடையில் வைத்து விற்ற தில்லைவிடங்கன் பகுதியை சேர்ந்த முருகன் (52) என்பவரை கைது செய்த போலீசார், ரூ.2,000 மதிப்புள்ள 240 பாக்கெட்டுகள் புகையிலைபொருட்கள், குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரேநாளில் அடுத்தடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், புதுச்சேரி மாநில கடத்தல் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News