உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

நியமனகுழு மற்றும் வரி விதிப்பு மேல் முறையீடு குழு உறுப்பினர்கள் தேர்வு

Published On 2022-04-03 13:06 IST   |   Update On 2022-04-03 13:06:00 IST
வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் நியமனகுழு மற்றும் வரி விதிப்பு மேல் முறையீடு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
அரியலூர்:

ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் நியமனகுழு மற்றும் வரி விதிப்பு மேல் முறையீடு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் பேரூராட்சி அலுவலக கூட்டமன்றத்தில் நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி வரவேற்றார்.பேரூராட்சி மன்ற தலைவர் மார்கிரெட் தலைமை வகித்தார்.  துணைத்தலைவர் எட்வின் ஆர்த்தர் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து நடை பெற்ற  நியமனம் குழு தேர்தலில் தலைவராக 15வது வார்டு திமுக உறுப்பினர் ஜான்விக்டர் தேர்வு செய்யப்பட்டார். வரி விதிப்பு மேல் முறையீடு குழு உறுப்பினர்களாக 13வது வார்டு உறுப்பினர் ஆலோசனை மேரிஸ், 10வது வார்டு உறுப்பினர் கனிமொழி, 6வது வார்டு உறுப்பினர் ஹெலன்  மேரி, 5வதுவார்டு உறுப்பினர் ஜோசப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Similar News