உள்ளூர் செய்திகள்
பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணி புரிந்து வருபவர் பிரேம்குமார். இந்த பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவி விடுதியில் தங்கி முதுகலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அந்த மாணவிக்கு பேராசிரியர் பிரேம்குமார் பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக தெரிகிறது. மேலும் அந்த மாணவிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி மாணவி சேலம் மாநகர போலீஸ் கமிசனரிடம் புகார் செய்தார்.
கமிசனர் உத்தரவின்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி பிரேம்குமார் மீது பாலியல் தொல்லை, பெண்கள் வன் கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு உள்ளிட்ட 6 சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்தார்.
மேலும் இது தொடர்பாக சூரமங்கலம் உதவி கமிசனர்(பொறுப்பு) சரவணகுமார் விசாரணை நடத்தி வருகிறார். பேராசிரியர் பிரேம்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.