உள்ளூர் செய்திகள்
ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சி-யூனியன் சேர்மன் ஜனகர் தொடங்கி வைத்தார்
ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சி குரும்பூரில் நடைபெற்றது.
நாசரேத்:
ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருநாள் புத்தாக்கப்பயிற்சி குரும்பூரில் நடந்தது.
ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுருதி முன்னிலை வகித்தார்.
இந்த பயிற்சியில் திட்டத்தின் நோக்கங்கள், பணிகள் போன் 2.0, இணை உணவு வளர்ச்சி கண்காணிப்பு, முன் பருவ கல்வி, சமுதாய பங்கேற்பின் பங்கு, திட்டத்தில் செயல்படுத்தப்படும் சுகாதார பணிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பங்கு ஆகியவை குறித்து விளக்கி கூறப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுருதி தலைமையில் மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார திட்ட உதவியாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர்.