உள்ளூர் செய்திகள்
நந்திவரம், கூடுவாஞ்சேரி ஏரிகளில் நடந்து சென்று கலெக்டர் ஆய்வு

ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு- நந்திவரம், கூடுவாஞ்சேரி ஏரிகளில் 5 கி.மீட்டர் நடந்து சென்று கலெக்டர் ஆய்வு

Published On 2022-03-30 12:36 IST   |   Update On 2022-03-30 12:36:00 IST
மழை காலங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படாத வகையில், ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

வண்டலூர்:

மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட வல்லாஞ்சேரி பகுதியில் உள்ள பெரிய ஏரி, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட காரணைப்புதுச்சேரி பெரிய ஏரி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஏரி, கிளாம்பாக்கம் ஏரி ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆய்வு செய்தார். ஒவ்வொரு ஏரி பகுதியிலும் நடந்தே சென்று பார்வையிட்டார்.

சுமார் 5 கி.மீட்டர் தூரம் நடந்தே சென்று கலெக்டர் ராகுல்நாத் கரைகளை ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சாய்கிருஷ்ணன் உள்பட வருவாய் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ் சாலைத்துறை, ரெயில்வே துறை, சி.எம்.டி.ஏ. மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அப்போது கலெக்டர் ராகுல்நாத்,அதிகாரிகளிடம் கூறும்போது, வல்லாஞ்சேரியில் இருந்து நந்திவரம், காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், மண்ணிவாக்கம், வரதராஜபுரம் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய்களை தூர் வார வேண்டும்.

மழை காலங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படாத வகையில், ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

Similar News