உள்ளூர் செய்திகள்
கைதான கிஷோர்- சதீஷ்- ஆரீப்.

காதலன் கண்முன் இளம்பெண் பலாத்காரம் - கைதான 3 பேர் செல்போன்களில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்

Published On 2022-03-30 10:33 IST   |   Update On 2022-03-30 11:38:00 IST
கடலூரில் காதலன் கண்முன் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான 3 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் மஞ்சகுப்பத்தில் உள்ள ஒரு கடையில் வேலைபார்த்து வருகிறார். இவர் செம்மண்டலம் பஸ் நிறுத்தம் அருகில் இரவு நேரத்தில் அழுதுகொண்டிருந்தார். அப்போது ரோந்து சென்ற கடலூர் டி.எஸ்.பி. ஆரோக்கிய ராஜ் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் தன்னை காதலன் முன்பு பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து விசாரித்ததில் அந்த பெண்ணின் காதலன் குண்டுஉப்பலவாடியை சேர்ந்த 20 வயது வாலிபர் என்றும். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்து வருவதும் தெரியவந்தது.

அந்த பெண் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது கம்மியம்பேட்டை பாலத்தின் கீழ்பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் குப்பன்குளத்தை சேர்ந்த கிஷோர் (வயது 19), சதீஷ் (19), கடலூர் புதுபாளையத்தை சேர்ந்த ஆரீப் என தெரியவந்தது.

இவர்களில் ஒருவர்தான் அந்த பெண்ணை காதலன் கண்முன் பலாத்காரம் செய்தார். இதனை வெளியே தெரிவித்தால் காதலன், காதலி சேர்ந்து இருக்கும் போட்டோக்களை வெளியிடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது.

உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்து திருப்பாதிரிபுலியூர் போலீஸ்நிலையத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் வைத்திருந்த செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த செல்போன்களில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது.

இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். எனறாலும் வேறு ஏதேனும் ஆபாச வீடியோக்கள் அழிக்கப்பட்டிருக்கிறதா? வேறு எந்த பெண்களையாவது மிரட்டி அந்த கும்பல் ஆபாச வீடியோக்கள் எடுத்துள்ளதா? இந்த கும்பல் அடிக்கடி யார் யாரிடம் பேசியுள்ளனர்? இது தொடர்பான தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

கைதான 3 பேரும் தீவிர விசாரணைக்கு பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News