உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் சஸ்பெண்ட்

Published On 2022-03-29 13:04 IST   |   Update On 2022-03-29 13:04:00 IST
நாகை அருகே விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தரை தற்காலிக பணி நீக்கம் செய்து முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நாகப்பட்டினம்:

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைக்கு லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
 
இந்நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமாபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பட்டியல் எழுத்தர் பாஸ்கர் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வைரல் ஆகியது.

இதனையடுத்து முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டதில் தெற்கு பொய்கைநல்லலூர் பகுதியை சேர்ந்த இளங்கோவிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய பட்டியல் எழுத்தர் பாஸ்கர் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வீதம் ரூ.1940 லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து பட்டியல் எழுத்தர் பாஸ்கரை தற்காலிக பணி நீக்கம் செய்து முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Similar News