உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பொது போக்குவரத்தினை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் பண்ருட்டியில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பொது போக்குவரத்தினை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் (29-ந் தேதி) பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனை முன்னிட்டு பண்ருட்டி பஸ் நிலையம், 4 முனை சந்திப்பு, மின்வாரியஅலுவலகம், அரசு போக்குவரத்து பணிமனை ஆகிய இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா இன்ஸ்பெக்டர் சந்திரன் சப்இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன் புஷ்பராஜ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கம்போல தனியார் பஸ்கள், ஆட்டோ, டாக்ஸி ஓடுகின்றது அரசு பஸ் குறைந்த அளவு மட்டும் இயக்கப்படுகிறது.