உள்ளூர் செய்திகள்
போராட்டம்

கடலூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Published On 2022-03-28 16:17 IST   |   Update On 2022-03-28 16:17:00 IST
கடலூர் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் ரேஷிஸ் தலைமை தாங்கினார்.

கடலூர்:

எல்.ஐ.சி பங்கு விற்பனையை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி ஊழியர் சங்கம் சார்பில் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து கடலூர் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் ரேஷிஸ் தலைமை தாங்கினார். வேலூர் கோட்டை இணைச்செயலாளர் வைத்திலிங்கம் வேலைநிறுத்த கோரிக்கைகள் கொடுத்து கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து குடியிருப்போர் நல சங்க தலைவர் வெங்கடேசன், வங்கி ஊழியர் ஓய்வு பெற்ற சங்கத்தின் தலைவர் மருதவாணன், எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் பால்கி, கடலூர் தாலுகா ஒன்றிய ஊழியர் சங்கத் தலைவர் மீரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் எல்.ஐ.சி ஊழியர்கள் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் கிளை பொருளாளர் ராஜூ நன்றி கூறினார்.

Similar News