உள்ளூர் செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு பரிசு.

நாகை கடற்கரையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

Published On 2022-03-28 12:22 IST   |   Update On 2022-03-28 12:22:00 IST
நாகை கடற்கரையில் நடைபெற்ற அமுத பெருவிழா நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நாகப்பட்டினம்:

75-வது சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நாகை புதிய கடற்கரையில் அமுத பெருவிழா நிகழ்ச்சி கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் இந்திய திருநாட்டின் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை மக்கள் அறிந்திடும் வகையில் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ&மாணவிகள் பரதநாட்டியம், தென்னக கலை பண்பாட்டுத்துறை சார்பில் தப்பாட்டம், கோலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தெம்மாங்கு பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

இந்நிகழ்வில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

Similar News