உள்ளூர் செய்திகள்
பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்கள்
நாகையில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்களை போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை டாட்டா நகரை சேர்ந்த குமரவேல் தன்னுடைய மோட்டார் சைக்கிளை பப்ளிக் ஆபீஸ் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். இதனை நோட்டமிட்ட படியே அவ்வழியே சென்ற 2 வாலிபர்கள் லாவகமாக சைடு லாக் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.
எப்போதும் பரபரப்பாக கூட்டம் மிகுந்து காணப்படும் இடத்தில் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பரபரப்பு காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் மூலம் மர்ம நபர்கள் திருடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு குமரவேல் கொடுத்த புகாரின் பேரில் நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.