உள்ளூர் செய்திகள்
ஆறு சரவணதேவர்.

கல்லூரி மாணவர் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை-முக்குலத்து புலிகள் கட்சி வலியுறுத்தல்

Published On 2022-03-27 11:05 IST   |   Update On 2022-03-27 11:05:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவர் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முக்குலத்து புலிகள் கட்சி வலியுறுத்தல்
நாகப்பட்டினம்:

முக்குலத்து புலிகள் கட்சி நிறுவனத்தலைவர் ஆறு சரவண தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு கிராமத்தில் போலீசார் மிரட்டியதால் 19 வயது கல்லூரி மாணவர் அக்னீஸ்வரன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

கச்சநத்தம் என்னும் ஊரில் நடந்த கொலை சம்பவத்தில் இவரது தந்தை, சகோதரர் மற்றும் இவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில் ஜாமீனில் வந்து இருந்த அக்னீஸ்வரனை தொடர்ச்சியாக போலீசார் தொந்தரவு செய்து வந்ததால் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

தமிழக அரசு இது குறித்து நீதி விசாரணை நடத்தி தற்கொலைக்கு தூண்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News