உள்ளூர் செய்திகள்
மரணம்

சங்கராபுரம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலி

Published On 2022-03-26 15:53 IST   |   Update On 2022-03-26 15:53:00 IST
சங்கராபுரம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் அருகே உள்ள செங்கணாங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன் மகன் கவுதம்(வயது 17). இவர் அரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.

இவரும், அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் தனசேகரன் என்பவர் ரிஷிவந்தியத்தை அருகே காட்டு எடையார் எல்லையில் உள்ள விவசாய நிலத்தில் வேலைக்காக டிப்பருடன் இணைக்கப்பட்ட டிராக்டரை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். உடன் கவுதமும் அந்த டிராக்டரில் அமர்ந்திருந்தார்.

காட்டு எடையார் எல்லையில் உள்ள விவசாய நிலத்தில் டிராக்டர் இறங்கியபோது அதில் அமர்ந்து இருந்த கவுதம் தவறி கீழே விழுந்தார். அப்போது டிப்பர் சக்கரம் அவரது உடலில் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த கவுதமை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டிராக்டரில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News