உள்ளூர் செய்திகள்
விவசாயி ஒருவருக்கு மண் வளம் பாதுகாப்பு குறித்த அட்டை வழங்கப்பட்டது

100 விவசாயிகளுக்கு மண்வள பாதுகாப்பு அட்டை

Published On 2022-03-25 15:16 IST   |   Update On 2022-03-25 15:16:00 IST
தியாகதுருகம் அருகே 100 விவசாயிகளுக்கு மண்வள பாதுகாப்பு அட்டை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே பொறையூர் கிராமத்தில் தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ் மண்வள அட்டை மற்றும் மண் வளம் குறித்த விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் தலைமை தாங்கினார்.

முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மலையரசன், வேளாண்மை அலுவலர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தினகரன் கலந்துகொண்டு மண் வளம் பாதுகாப்பது குறித்தும், பயிர்களில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தும் விதம் குறித்தும், பேராசிரியர் ஜான்சன் தங்கராஜ் எட்வர்டு மக்காச்சோள பயிர்களில் படைபுழு கட்டுப்பாடுகள் குறித்தும், பேராசிரியர் அய்யாதுரை உழவியல் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

அதனை தொடர்ந்து சுமார் 100 விவசாயிகளுக்கு மண்வள பாதுகாப்பு அட்டை வழங்கப்பட்டது. அப்போது உதவி வேளாண் அலுவலர் இளையராஜா, பயிர் அறுவடை அலுவலர்கள் முருகன், சதீஷ்குமார் மற்றும் விவசாயிகள் பலரும் உடனிருந்தனர்.

Similar News