உள்ளூர் செய்திகள்
500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
பவானி லட்சுமி நகர் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சித்தோடு:
பவானி லட்சுமி நகர் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பவானி அருகே உள்ள லட்சுமி நகர் சேலம்-கோவை பைபாஸ் சாலையில் சித்தோடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கார் ஒன்றில் ஓசூரில் இருந்து திருப்பூர் கொண்டு செல்ல சுமார் 300 கிலோ முதல் 500 கிலோ எடை வரை குட்கா பொருட்கள் கொண்டு செல்லபடுவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகையன், சப்&இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரின் உள்ளே சுமார் 500 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் போலீசார் விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, சாலிகிராமம் பகுதியை சேர்ந்த மாதேசன் (32) என்பதும், விற்பனைக்காக தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேசனை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 500 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.