உள்ளூர் செய்திகள்
ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

Published On 2022-03-25 13:32 IST   |   Update On 2022-03-25 13:32:00 IST
ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
கொடுமுடி:

ஊஞ்சலூர் மாரியம்மன்  கோவில் தேர் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

கொடுமுடி அருகே ஊஞ்சலூரில்  பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம், தேர்  திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு கடந்த 8-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அன்றைய தினமே கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

கடந்த 13-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து தினசரி அம்மன் திருவீதி உலா மற்றும் அம்மனுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.  23-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று மாலை தேரை  ஊஞ்சலூர் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். 

முன்னதாக கிராம பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரையும், கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டரையும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

இன்று மஞ்சள் நீராட்டுடன் பதினெட்டு நாள் குண்டம், தேர் திருவிழா நிறைவு பெற்றது.

Similar News