உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம்

மாமல்லபுரம் கடற்கரையை சுத்தப்படுத்த ஆலோசனை

Published On 2022-03-23 12:54 IST   |   Update On 2022-03-23 12:54:00 IST
தமிழ்நாடு ஊரகமாற்றம் திட்ட மாவட்ட செயலாக்க அலுவலர் தினகர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில்களுக்கு அரசு மானியம் வழங்குவது குறித்து விளக்கம் அளித்தார்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த தேவநேரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாமல்லபுரம் கடற்கரை தூய்மை பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டம்நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஊரகமாற்றம் திட்ட மாவட்ட செயலாக்க அலுவலர் தினகர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில்களுக்கு அரசு மானியம் வழங்குவது குறித்து விளக்கம் அளித்தார். திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர், கல்பாக்கம் அணுசக்தித் துறை, கழிவு மேலாண்மை பொறியாளர் உட்பட 13 கடலோர பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். அரசு நிதியுதவியுடன் 13 கடலோர கிராமங்களில் பிளாஸ்டிக் பாட்டில், குப்பைகளை அள்ளுவதற்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட, கடல் மண்ணிலும், நீரிலும் புதையாத வாகனத்தை., அடுத்த மாதம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கிழக்கு கடற்கரை சாலை கடலோர கிராமம் பட்டிபுலத்தில் அறிமுகம் செய்து வைக்கிறார்.

Similar News