உள்ளூர் செய்திகள்
நீச்சல் குளத்தில் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள்.

வ.உ.சி பூங்கா நீச்சல் குளம் திறப்பு

Published On 2022-03-22 15:50 IST   |   Update On 2022-03-22 15:50:00 IST
கடந்த சில நாட்களாக பராமரிப்பு செய்யும் பணி நடந்தது. இதனை தொடர்ந்து நீச்சல் குளம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
ஈரோடு:

ஈரோடு வ.உ.சி பூங்காவில் அரசு நீச்சல் குளம் உள்ளது.  

இங்கு காலை, மாலை நேரங்களில்  நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.  கொரோனா தாக்கம் காரணமாக  கடந்த 2 வருடங்களுக்கு முன்பு  நீச்சல் குளம் பூட்டப்பட்டது. 

இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. 

தேசிய, மாநில போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மட்டும் நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்று வந்தனர்.

இதையடுத்து கொரோ னா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை  வ.உ.சி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து கடந்த சில நாட்களாக பராமரிப்பு செய்யும் பணி நடந்தது.  அதனை தொடர்ந்து நேற்று முதல் நீச்சல் குளம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்கூறியதாவது:&

தினமும் காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணிவரை நீச்சல் குளம் திறந்திருக்கும். மதியம் 1 முதல் 3 மணி வரை உணவு இடைவேளைக்காக மூடப்படும். 

பின்னர் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். 5 மணி முதல் விளையாட்டு விடுதி மாணவிகள் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள். 

7 வயதுக்கு மேற்பட்டோர் நீச்சல் பயிற்சி பெறலாம். ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News