உள்ளூர் செய்திகள்
கைது

கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு- மருந்து கடை உரிமையாளர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-03-22 15:46 IST   |   Update On 2022-03-22 15:46:00 IST
கருக்கலைப்பு செய்த வழக்கில் கைதான 2 பெண்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தில் மதுரை மாவட்டம் மேலூர் ஆலம்பாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி முத்துக்குமாரி(வயது 40) என்பவர் மருந்து கடை நடத்தி வந்தார்.

இந்த மருந்து கடையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி(25) என்பவருக்கு கருக்கலைப்பு செய்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து முத்துக்குமாரி, அவரது உதவியாளர் அ.பாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த மனைவி கவிதா(35) ஆகிய 2 பேரையும் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் முத்துக்குமாரி, கவிதா ஆகியோர் தொடர் குற்ற செயலில் ஈடுபடாமல் இருப்பதற்காக அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதை ஏற்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் கடலூர் சிறையில் இருந்த முத்துக்குமாரி, கவிதா ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்து வேலூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.

கருக்கலைப்பு செய்த வழக்கில் கைதான 2 பெண்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Similar News