உள்ளூர் செய்திகள்
வழக்கு

காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்ம மரணம்- 7 பேர் மீது வழக்கு

Published On 2022-03-22 15:45 IST   |   Update On 2022-03-22 15:45:00 IST
சங்கராபுரம் அருகே காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் குறித்து 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. அவரது மகள் பிரியா(வயது 24). இவரது பெற்றோர் இறந்து விட்டனர். எனவே பிரியா தனது பாட்டி ஆதிலட்சுமி என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

அதே ஊரை சேர்ந்த வேலுமணி. அவரது மகன் சிவகுமார்(26) இவர் பிரியாவை கடந்த 4 வருடமாக காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதில் கர்ப்பம் அடைந்த பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்திய போது சிவகுமார் மறுத்துவிட்டார்.

பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்ட சிவகுமாரும், அவரது குடும்பத்தினரும் பிரியாவை அழைத்து கருவை கலைக்க சொல்லி மிரட்டினர்.

இது குறித்து பிரியா திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து சிவகுமாருக்கும் பிரியாவுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி அன்று அங்குள்ள விநாயகர் கோவிலில் வைத்து ஊர் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

பின்னர் 2 நாட்கள் குடும்பம் நடத்திய நிலையில் பிரியாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு அங்கிருந்து சென்ற சிவகுமார் மீண்டும் திரும்பி வரவில்லை.

சுமார் ஒருமாதத்துக்கும் மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரியா சிகிச்சை பலன் இன்றி கடந்த 19-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

எனவே பிரியா சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர் சுப்பிரமணி கொடுத்தார். அதன்பேரில் சிவகுமார், அவரது தாய் சாந்தி, தம்பி குபேந்திரன் உள்பட 7 பேர் மீது சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News