உள்ளூர் செய்திகள்
வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு கிரிக்கெட் போட்டி
கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் கோபி உட்கோட்டத்திற்குட்பட்ட வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் கோபி உட்கோட்டத்திற்குட்பட்ட வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
கோபி சரக துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கூட்டுறவு துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணி யாளர்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் ஆகியோர் பவானி வட்டாரம், சத்தி வட்டாரம், தாளவாடி வட்டாரம், அம்மா பேட்டை வட்டாரம், பவானிசாகர் வட்டாரம், நம்பியூர் வட்டாரம், சரக துணைப்பதிவாளர் அலுவலக அணி என வட்டாரவாரியாக 9 கிரிக்கெட் அணிகளாக பிரிக்கப்பட்டு அந்த அணிகளுக்கு இடை யேயான கிரிக்கெட் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது.
இறுதி போட்டியில் அம்மாபேட்டை வட்டாரம் முதல் பரிசையும், நம்பியூர் வட்டாரம் 2&ம் பரிசையும், சத்தி வட்டாரம் 3&ம் பரிசையும் வென்றது.
கோபி சரக துணைப்பதிவாளர் கந்தராஜா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், கோப்பையும் வழங்கினார்.
இவ்விழாவில் கூட்டுறவு சார்பதி வாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.