உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோட்டில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு

Published On 2022-03-22 15:30 IST   |   Update On 2022-03-22 15:30:00 IST
137 நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்தது. ஈரோட்டிலும் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈரோடு:

137  நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்தது. ஈரோட்டிலும் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. 

தமிழகத்திலும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 தாண்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

கடந்த வருடம் நவம்பர் மாதம் தீபாவளிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை மாறாமல் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

இந்நிலையில் 5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் விலை உயரவில்லை. 

ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை இன்று உயர்ந்தது.

கிட்டத்தட்ட 137  நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்தது. ஈரோட்டிலும் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. ஈரோட்டில் இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.89-க்கு விற்கபட்டு வந்தது. 

இன்று 76 காசு உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.65-க்கு விற்கப்பட்டது. 

அதேப்போல் டீசல் விலையும் உயர்ந்து உள்ளது. இதுவரை ஒரு லிட்டர் டீசல் ரூ.91.93-க்கு விற்கப்பட்டது. இன்று 77 காசுகள் உயர்ந்து ரூ.92.70-க்கு விற்க்கப்பட்டது.

Similar News