உள்ளூர் செய்திகள்
நடவடிக்கை

தரமற்ற குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Published On 2022-03-22 15:22 IST   |   Update On 2022-03-22 15:22:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் தரமற்ற குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் அறி வுறுத்தலின்படி குடிநீர் தயாரித்து விற்பனை செய்யும்  நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் ஆய்வு கள் செய்யப்பட்டன. 

விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே குடிநீர் உணவு மாதிரிகள் எடுத்து  ஆய்வு செய்யப்பட்டத்தின் அடிப்படையில் 13 கிரிமினல் வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 2 வழக்குகளில்  அபராதமும், சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. 

தன் தொடர்ச்சியாக இந்த வாரம் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இவற்றில் குறைகள் கண்டறி யப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு  உணவு பாதுகாப்புத் துறையின் மூலம்  நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது. சந்தேகத் திற்குரிய குடிநீர் உணவு மாதிரிகள்  தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து  எடுக்கப்பட்டு  ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வுகளின் முடிவின் அடிப்படையில்  தயாரிப்பு நிறுவனங்களின் மீது  நீதி மன்றம் மூலம் வழக்குகள்  தொடரப்படும்.

மக்களுக்கு கிடைக்கக் கூடிய குடிநீர்  பாதுகாப் பானதாக  இருக்க வேண் டும்.    குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள்  ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ்,  பொதுப் பணித்துறையில் இருந்து  நிலத்தடி நீர் அனுமதி சான்றிதழ் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையில் இருந்து FSSAI உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

குடிநீர் விநியோகஸ்தர் கள், மொத்த விற்பனையாளர்கள்  உணவு பாதுகாப்பு  துறையில் உரிமம் மற்றும் பதிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பொதுமக்கள்  குடிநீர் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் கேன்கள்  வாங்கும்போது தயாரிப்பு தேதி, பயன்பாட்டு தேதி அச்சிடப்பட்டுள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் கேன்களில் ISI  மற்றும் FSSAI  எண் இல்லை என்றால் அது போலியானது என்பதை  அறிய வேண்டும்.

குடிநீர் தரம் மற்றும் உணவு கலப்படம் பற்றிய புகார்கள் இருந்தால் உணவு பாதுகாப்பு  துறையின் வாட்ஸ்அப் புகார் எண்: 94440-42322 என்ற எண்ணுக்கோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  மாவட்ட உணவு பாதுகாப்பு  துறை அலுவலக 04562-225255 எண்ணிற்கோ புகார் தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Similar News