உள்ளூர் செய்திகள்
கைது

சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

Published On 2022-03-22 10:04 IST   |   Update On 2022-03-22 10:04:00 IST
பல்லாவரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாம்பரம்:

பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (29). இவருடைய சகோதரர் சத்யா என்கிற ஹெட்லைட் சத்யா (20).

சத்யா மீது பல்லாவரம் காவல் நிலையத்தில் வழிபறி, அடிதடி, கொலை முயற்சி போன்ற 11 வழக்குகள் உள்ள நிலையில் சத்யாவிற்கும் அவரது அண்ணன் முருகேசனுக்கும் தென்காசியில் உள்ள சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நேற்று இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவதத்தில் சத்யா சகோதரரை கொலைசெய்யும் நோக்கில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியதில் முருகேசேனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து  பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து  குற்றவாளியான சத்யாவை கைது செய்த போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News