உள்ளூர் செய்திகள்
பலி

சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி மீன்பிடி தொழிலாளி பலி

Published On 2022-03-21 15:57 IST   |   Update On 2022-03-21 15:57:00 IST
சங்கராபுரம் அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி தொழிலாளி இறந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக வடபொன் பரப்பி போலீசாருக்கு தகவல் கிடை த்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் ஏரியில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொட ர்ந்து போலீசார் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் இறந்து கிடந்த அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த குமார்( வயது 40) என்பதும், இவர் மீன்பிடிக்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று குமார் ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி இறந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Similar News