உள்ளூர் செய்திகள்
கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்

Published On 2022-03-21 15:29 IST   |   Update On 2022-03-21 15:29:00 IST
கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.
கவுந்தப்பாடி:



கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.



இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக் கும் மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டனர்.



விழாவில் பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு கட்டாயக் கல்வி, மாணவி கள் பெற்றோர் விழிப் புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் ஆசிரியர் பயிற்றுனர் அன்பரசன் பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.



இதே போல் கவுந்தப்பாடி  அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளி, வடக்கு தொடக்கப் பள்ளி, தெற்கு தொடக்கப் பள்ளி மணியம் பாளையம் தொடக்கப் பள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடை பெற்றது.

Similar News