உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா தினசரி பாதிப்பு இல்லை

Published On 2022-03-21 13:38 IST   |   Update On 2022-03-21 13:38:00 IST
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக  கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலை கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தினசரி பாதிப்பு அதிகமாக பரவியது. 

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக தற்போது தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 16&ந் தேதி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 

 இதனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு பதிவானது. அதன் பின்னர் தினசரி பாதிப்பு 1, 2 என பதிவாகி வந்தது.

 இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் யாருக்கும் தொற்று பதிவாகவில்லை. இதனால் மீண்டும் இரண்டாவது முறையாக கொரோனா தினசரி பாதிப்பு இல்லாத மாவட்டமானது ஈரோடு . 
 இதுவரை மாவட்டத்தில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 665 ஆக பதிவாகியுள்ளது. ஒரே நாளில் மேலும் 2 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட் டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 918 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை 734 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 15 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News