உள்ளூர் செய்திகள்
மது விற்றவரை விரட்டி சென்றபோது தவறி விழுந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு அறுவை சிகிச்சை
நம்பியூர் பகுதியில் மது விற்றவரை விரட்டி சென்றபோது சப்-இன்ஸ்பெக்டர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நம்பியூர்:
நம்பியூர் பகுதியில் மது விற்றவரை விரட்டி சென்றபோது சப்-இன்ஸ்பெக்டர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நம்பியூர் அருகே உள்ள கெடாரை பகுதியில் மது விற்பனை நடந்து வருவதாக வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் (57) மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் வேலன் என்கிற வேலுச்சாமி என்பவர் மது விற்றுக் கொண்டிருந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் பிடிக்க முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சப்-இன்ஸ் பெக்டர் ராஜமாணிக்கம் தலை மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயம் அடைந்தார்.
அப்போது மது விற்ற வேலன் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபிசெட்டி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு இன்று இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் நடந்த 3மணி நேரத்தில் மது விற்ற வேலனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.