உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

தமிழக அரசுக்கு திருமாவளவன் பாராட்டு

Published On 2022-03-21 12:33 IST   |   Update On 2022-03-21 12:33:00 IST
சிறந்த நிர்வாகத்தின் மூலம் வருவாய் பற்றாக்குறையை குறைத்திருப்பது பாராட்டுக்குரியது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூரில் செய்தியா ளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது :
தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் சிறந்த முறையில் பல்வேறு அம்சங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 8 மாதங்களில் சிறப்பான நிர்வாகத்தின் மூலம் வருவாய் பற்றாக் குறையை குறைத்து இருப்பது பாராட்டுக்குரியது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவது இயல்பான ஒன்றுதான். ஆனால் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டு இலங்கை அரசு இந்தியாவுக்கு பல்வேறு நெருக்கடிகளை அளித்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக வும், இலங்கை தமிழர்களுக்கு எதிராகவும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலனை செய்ய வேண்டும்.

உக்ரைனிலிருந்துபோர் காரணமாக இந்தியா திரும் பிய மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் மேலும் உக் ரைன்&ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா இருநாடுகளிடமும் பேசி அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Similar News